1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 7 நவம்பர் 2023 (07:14 IST)

தங்கலான் படத்தின் டப்பிங்கை முடித்த விக்ரம்!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்’ என்ற திரைப்படத்தில் விக்ரம், பாரவ்தி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

நவம்பர் 1 ஆம் தேதி தங்கலான் படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 26 ஆம் தேதி என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ரிலீஸுக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் படத்தின் நாயகனான விக்ரம் தன் காட்சிகளுக்கான டப்பிங்கை பேசி முடித்துள்ளாராம். படத்தில் அவருக்கு வசனங்கள் மிகக்குறைவு என்பதால் ஒரு மணிநேரத்தில் மொத்த காட்சிகளுக்கும் பேசி முடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.