1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 1 ஜூன் 2020 (10:45 IST)

’பேட்ட’ இயக்குனர், ’மாஸ்டர்’ தயாரிப்பாளர்: பிரமாண்டமாக உருவாகும் விக்ரம் அடுத்த படம்

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சியான் விக்ரம், தற்போது மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ மற்றும் அஜய் ஞானமுத்து இயக்கிவரும் ’கோப்ரா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் இந்த நிலையில் விக்ரம் நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது 
 
விக்ரம் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை பேட்ட’ பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை ’மாஸ்டர்’ பட தயாரிப்பாளர் லலித் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது 
 
விக்ரமின் 60வது திரைப்படமான இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்றும் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உலகின் பல நாடுகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது. மேலும் இதுவரை நடித்திராத வித்தியாசமான கேரக்டரில் விக்ரம் நடிக்க இருப்பதாகவும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டைலில் ஆங்காங்கே டுவிஸ்டுகள் இந்த படத்தில் இருக்கும் என்று கூறப்படுவதால் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ திரைப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முற்றிலும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் லலித் தயாரித்த ’மாஸ்டர்’ திரைப்படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு திரைப்படங்களும் ஊரடங்கு முடிந்த பின் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகும்