செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 4 ஏப்ரல் 2020 (08:04 IST)

ரசிகர்களின் கோரிக்கையை ஏற்ற விஜய் டிவி... "லொள்ளு சபா" எப்போ? என்ன Time'க்கு தெரியுமா?

கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சினிமா, சீரியல் படப்பிடிப்புகள் முழுவதும் முடங்கியுள்ளன. முக்கியமாக சின்னத்திரை சீரியல்கள் படப்பிடிப்பு முழுவதுமாக நிறுத்தப்பட்டு 15 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது.

தொடர்ந்து படப்பிடிப்புகள் நடைபெறாததால் அடுத்த எபிசோடுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ள டிவி சேனல்கள் தற்போது தங்களது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பழைய டிவி சீரியல்களை மறு ஒளிபரப்பு செய்ய தொடங்கியுள்ளன. அந்த வகையில் பிக்பாஸ், சக்தி மான் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மறுஒளிபரப்பு செய்யவுள்ளனர்.

அந்தவகையில் சந்தானத்தின் லொள்ளு சபா நிகழ்ச்சியை மறுஒளிபரப்பு செய்யச்சொல்லி பலரும் கேட்டு வருகின்றனர்.     மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான அஷ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் "லொள்ளு சபா" நிகழ்ச்சியை ஒளிபரப்ப சொல்லி விஜய் டிவிக்கு கோரிக்கை வைத்திருந்தார். அவர்களின் கோரிக்கையை ஏற்று லொள்ளு சபா நிகழ்ச்சி வரும் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருப்பதாக விஜய் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. இந்த ப்ரோமோ விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு " குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்று அஷ்வின் பதிவிட்டுள்ளார்.