1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 11 ஜூலை 2023 (07:43 IST)

“ஆர் ஆர் ஆர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும்…”- ராஜமௌலியின் தந்தை தகவல்!

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு ரிலீஸான திரைப்படம் ஆர் ஆர் ஆர். சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் அமைந்த கதைக்களத்தில் இரு வரலாற்று பாத்திரங்களை கற்பனையாக ஒன்றிணைத்து இந்த படத்தை ராஜமௌலி உருவாக்கி இருந்தார்.

இந்தபடம் வெளியாகி திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. உலகம் முழுவதும் சுமார் 1000 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது. இந்த படத்தின் நாட்டு கூத்து பாடல் ஆஸ்கர் விருதை வென்று உலகளவில் புகழ்பெற்றது.

இந்நிலையில் இப்போது ஆர் ஆர் ஆர் படத்தின் கதை ஆசிரியரும், இயக்குனர் ராஜமௌலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் ஆர் ஆர் ஆர் படத்தின் இரண்டாம் பாகம் பற்றி பேசியுள்ளார். அதில் “ஆர் ஆர் ஆர் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க ஒரு ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளது. இரண்டாவது பாகத்திலும் ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம்சரண் தேஜா ஆகிய இருவரும் நடிப்பார்கள். ராஜமௌலி இயக்குவார் அல்லது அவர் மேற்பார்வையில் வேறொருவர் இயக்குவார்” எனக் கூறியுள்ளார்.