1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 29 செப்டம்பர் 2018 (18:09 IST)

விஜயலட்சுமியின் கணவர் உருக்கமான டுவிட்....

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி நாளையுடன் நிறைவடைகிறது. இறுதி கட்ட போட்டியாளர்களாக ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி என நான்கு பேர் உள்ளனர். இதில் யார் மக்களின் மனங்களை வென்ற அந்த போட்டியாளர் என்பது நாளை தெரிந்துவிடும். நாளை பிரம்மாண்டமான பைனல் நடைபெறுகிறது.

 
இந்நிலையில் விஜயலட்சுமியின் கணவர் பெராஸ் தனது மனைவி தன்னை விட்டு பிரிந்து பிக்பாஸ் இல்லத்தில் 50 நாட்களை கடந்துவிட்ட எண்ணி உருக்கமாக ஒரு படத்தை போட்டு டுவிட் செய்துள்ளார். விஜயலட்சுமியும் அவரது மகன் நிலனும் சேர்ந்து இருக்கும் படத்தை போட்டுள்ள பெரோஸ்,  'நிலன் உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதைவிடவும் உன் அம்மாவை பிடிக்கும்.  நான் அவளை ரொம்பே மிஸ் பண்றேன்' என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
 
இந்த படத்துக்கு கீழ் கவலைப்பட வேண்டாம் என்றும் இன்னும் இரண்டு நாளில் உங்கள் மனைவி வந்துவிடுவார் என்றும் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.