1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 8 டிசம்பர் 2023 (13:05 IST)

விஜயகாந்த் பட பிரபலம் மறைவு- பிரேமலதா விஜயகாந்த் நிதி உதவி

velumani family
நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான பிரபல படங்களின் வசன கர்த்தா ஆர்.வேலுமணி. இவர் இன்று காலமானார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜயகாந்த். இவர் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான படம் எங்கள் ஆசான். 2010 ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான படம் விருதகிரி.  கடந்த 2015 ஆண்டு விஜய்காந்த், சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியான படம் சகாப்தம்.  
 
இப்படங்களின் வசன கர்த்தா ஆர்.வேலுமணி. இவர் இன்று காலமானார். எனவே  பிரேமலதா விஜயகாந்த் கு வேலுமணியின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறியதுட்ன நிதியுதவி செய்துள்ளனர்.
 
இதுகுறித்து விஜயகாந்தின் எக்ஸ் தளத்தில், 
 
''கேப்டன் விஜயகாந்த் அவர்களின் எங்கள் ஆசான், விருதகிரி, சகாப்தம் மற்றும் சகாப்தம் ஆகிய படங்களின் வசனகர்த்தா திரு.R.வேலுமணி அவர்கள் 
 
இன்று உடல்நலக்குறைவால் கடலூரில் காலமானார், அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கினங்க  இன்று (08.12.2023) திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து நிதியுதவி வழங்கினார்கள்.''என்று தெரிவித்துள்ளார்.