திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Updated : திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (13:44 IST)

விஜய் பாட்டுக்கு கிடைத்த சாதனை

’மெர்சல்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல், உலக அளவில் ஹிட்டாகியுள்ளது.

 
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘மெர்சல்’. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. பாடலாசிரியர் விவேக், இந்தப் பாடலுக்கான வரிகளை எழுதியிருந்தார்.
 

பாடல் வெளியான நிமிடத்தில் இருந்தே பரபரப்பு பற்றிக் கொண்டது. தமிழைப் பற்றியும், தமிழர்களைப் பற்றியும் உயர்வாக எழுதியிருப்பதால், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது இந்தப் பாடல். குறிப்பாக, தமிழ்நாடு, இலங்கை மற்றும் தமிழர்கள் வசிக்கும் வெளிநாடுகளில் ஏராளமானோர் இந்தப் பாடலை டவுன்லோடு செய்துள்ளனர்.

கடந்த வாரத்தில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக, ‘ஆளப் போறான் தமிழன்’ என்பதை கூகுள் ட்ரெண்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன், ‘வேர்ல்டு மியூஸிக் அவார்ட்ஸ்’ நிறுவனம், இந்தியாவில் ஹிட்டான பாடல்களில் இந்தப் பாடலையும் சேர்த்துள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, வருகிற 20ஆம் தேதி நடைபெற உள்ளது.