திங்கள், 23 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (11:29 IST)

பாடல் மூலம் லீக்கானதா மெர்சல் படத்தின் கதை?

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற 'ஆளப்போறான் தமிழன்' பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் ஆளப்போறான் தமிழன் பாடல் தான் இந்தியாவிலேயே சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 
இப்பாடல் பிரமாண்டமாக எடுத்துள்ளனர், அதில் விஜய்யுடன் ஒரு சிறுவன் இருப்பது போல் போஸ்ட்டர்கள் உள்ளது. அது தான் மருத்துவராக வரும் விஜய் என தெரிகின்றது, இன்னொரு மகன் இல்லை.
 
இதனால் சிறுவயதிலேயே ஒரு விஜய் பெற்றோரை விட்டு பிரிந்திருப்பார் என தெரிகின்றது, அவர்தான் மேஜிக் நிபுணராக வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அப்பா விஜய்யை கொன்றவர்களையும், எதற்காக கொன்றார்கள் என்பதையும் தெரிந்துக்கொண்டு இரண்டு மகன்களும் பழிவாங்கும் கதைதான் மெர்சல் என்றும் கூறப்படுகிறது.