வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: சனி, 12 ஆகஸ்ட் 2017 (06:32 IST)

மூன்று மதங்களின் சங்கமம்' ஆளப்போறான் தமிழன் பாடல்?

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற 'ஆளப்போறான் தமிழன்' பாடல் பெற்ற வரவேற்பை இப்போதைக்கு வேறு எந்த பாடலும் பெறவில்லை என்பது உண்மை. காரணம் இது விஜய் பாடல், ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் என்பது மட்டுமல்ல, தமிழ்ப்பற்று மற்றும் தமிழர்களின் பெருமை ஆகியவை இருந்ததால்  அனைவருக்கும் விருந்தாக அமைந்தது. இந்த நிலையில் இந்த பாடல் மூன்று மதங்களின் சங்கமம் என்ற பெயரில் ஒரு மிமி சமூகவலைத்தளத்தில் உலாவி வருகிறது



 
 
அதாவது இந்து பாடலாசிரியர் விவேக், முஸ்லீம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கிறிஸ்துவ நடிகர் விஜய் என மதத்தால் பிரிந்திருந்தாலும் 'தமிழன்' என்ற வகையில் மூன்று மதங்களும் ஒருங்கிணைத்துள்ளதாக அந்த மிமியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த மிமி குறித்து இந்த பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேக் தனது டுவிட்டரில் கூறியபோது, 'இந்த பாடலுக்கு நாங்கள் பணிபுரிந்தபோது இதை பற்றி நினைத்து கூட பார்த்ததில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.