திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 1 நவம்பர் 2020 (10:51 IST)

பேரரசுவுக்கு விஜய் கால்ஷீட் கொடுக்கவே மாட்டார்… ஏன் தெரியுமா?

நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குனர் பேரரசு இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளன.

மாஸ்டர் படத்துக்குப் பின்னர் விஜய் நடிக்கும் விஜய் 65 படத்தை இயக்க இருந்த ஏ ஆர் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். இதனால் இப்போது அந்த படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி விஜய் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த பட்டியலில் இயக்குனர் பேரரசுவும் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் கிட்டத்தட்ட அவர்தான் இயக்குவார் என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால் விஜய் ரசிகர்களோ அவர் வேண்டாம் என இணையத்தில் புலம்பி வருகின்றனர். என்னதான் அவர் திருப்பாச்சி மற்றும் சிவகாசி என இரண்டு ஹிட் படங்களை விஜய்க்கு கொடுத்திருந்தாலும், அவர் பாணி படங்கள் எல்லாம் காலாவதி ஆகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்றும் இப்போது கூட திருப்பாச்சி, சிவகாசி படங்கள் தொலைக்காட்சியில் வெளியானால் பலரும் கேலி செய்து வருகின்றனர் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அதனால் விஜய் என்ன முடிவு எடுப்பார் எனத் தெரியவில்லை.

இந்நிலையில் விஜய் கண்டிப்பாக பேரரசுவுக்கு கால்ஷீட் கொடுக்க மாட்டார் என சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் விஜய்யைக் கடுமையாக எதிர்க்கும் கட்சியான பாஜகவில் இருப்பதுதான் என சொல்லப்படுகிறது. விஜய்க்கு பாஜகவை எதிர்ப்பாளர் என்ற ஒரு இமேஜ் உருவாகியுள்ளது. அதனால் அதை கெடுத்துக் கொள்ள அவர் விரும்பவில்லையாம்.