ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 14 மார்ச் 2024 (21:38 IST)

''குக் வித் கோமாளி''யில் செஃப் வெங்கடேஷ் பட்டிற்கு பதிலாக இவரா?

cook with comali
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி  ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில், பங்கேற்றவர்களும் சினிமாவில் புகழ்பெற்றுள்ளனர்.
 
இதுவரை நான்கு சீசன்கள் முடிந்துள்ள நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்க உள்ளது. அதில் போட்டியாளர்களாக யார் யார் கலந்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து நடுவராக பங்கேற்று வந்த நடுவராகப் பங்கேற்ற செஃப் வெங்கடேஷ் பட்  சீசனில் இருந்து விலகுவதாக அறிவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். எனவே தாமுவுக்கு துணையாக யார் நடுவராக வரப்போகிறார் என கேள்வி எழுந்துள்ளது.
 
இந்நிலையில் இப்போது இந்த நிகழ்ச்சியின் இயக்குனரான பார்த்திபனும் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.
 
சீசன் 5 தொடங்குவதற்கு முன்பே பல குழப்பங்களை ஏற்படுத்தியுள்ள  நிலையில், குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் நடிகரும் கோவையைச் சேர்ந்த சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ்  செஃப் தாமுவுடன் இணைந்து நடுவராகப் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 
அதேசமயம் நடிகர் சுரேஷும் நடுவராக பங்கேற்கலாம் என தகவல்கள் வெளியாகிறது.
 
இன்னும் சில  நாட்களில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.