திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (14:11 IST)

"தளபதி 63" ஷூட்டிங் இடைவெளியில் ஷாப்பிங் சென்ற விஜய்.! வைரல் புகைப்படம் இதோ!

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் தளபதி விஜய் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லி கூட்டணியில்  தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக  'தளபதி 63' படத்திற்காக இணைந்துள்ளனர்.


 
விஜய்க்கு ஜோடியாக  நயன்தாரா நடிக்கும்  இப்படத்தில்  கதிர், யோகிபாபு டேனியல் பாலாஜி உள்ளிட்டோர்  நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளார்.
 
விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு காபந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்றும், மேலும், விஜய் தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருப்பார் என தகவல் வெளிவந்தது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடந்து வருகிறது. 
 
இந்த படத்தை பற்றிய வதந்திகள், ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ, வீடியோ என  அடிக்கடி வெளியான வண்ணம் இருக்கிறது. 


 
அந்தவகையில் தற்போது  விஜய்யின் புதிய புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் விஜய் சிவப்பு நிற டீ - சர்ட் மற்றும் கருப்பு கலர் கோர்ட் அணிந்து கொண்டு செம சீனாக ஷாப்பிங் சென்றுள்ளார். அந்த புகைப்படம் தான் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.