வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 22 ஏப்ரல் 2019 (14:07 IST)

முதல் பரிசு அவங்களுக்கு தான் கொடுத்திருக்கவேண்டும்! விஜய் டிவி-யை வெளுத்து வாங்கும் நெட்டிசன்ஸ்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவடைந்தது. 


 
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் முதல் சீசன்  கடந்த 2006 ஆம் ஆண்டு ஆரம்பித்து தற்போது 6 சீசனை கடந்துள்ளது. கடந்த 14 ஆண்டு காலமாக இந்த நிகழ்ச்சியின் மூலம் பல திறமையான இசைக்கலைஞர்களை திரைத்துறைக்கு கொடுத்துள்ளது விஜய் டிவி. 
 
கடந்த முறை மக்கள் இசைக் கலைஞர் செந்தில் கணேஷ் வெற்றி பெற்று பிரபலமானதையடுத்து நேற்று சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. அப்போது இறுதிப் போட்டியில் இடம்பெற்ற பூவையார், சின்மயி, அனுஷ்யா, அஹானா, சூர்யா மற்றும் ஹிருத்திக் ஆகிய 6 போட்டியாளர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இரு சுற்றுகள் நடந்த இந்த இறுதிப் போட்டியில், ரித்திக் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள வீடும் பரிசாக வழங்கப்பட்டது. 
 
2ம் பரிசாக சிங்கப்பூரைச் சேர்ந்த சூர்யா பெற்றார். அவருக்கு 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் பரிசாக வழங்கப்பட்டது. 3ம் இடம் பெற்ற பூவையாருக்கு ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. 


 
இந்த சீசனின் இறுதிப்போட்டிக்கு பல்வேறு போட்டிகள் நிலவிய அனுஷ்யாவிற்கு பரிசே வழங்கவில்லை. ஆனால், அவருக்கு பதிலாக ரித்திக் முதல் பரிசை வென்றது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை அளித்தது. அதனால் ரசிகர்கள் பலரும் அனுஷயாவிற்கு முதல் பரிசு வழங்கபட்டிருக்க வேண்டும் என்று தங்களது ஆதங்கத்தை தொடர்ந்து தெரிவித்து விஜய் தொலைக்காட்சியை  சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர்.