செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 4 பிப்ரவரி 2021 (15:48 IST)

சிவகார்த்திகேயனுக்காக தனது பல வருடப் பழக்கத்தை மாற்றிக்கொள்ளும் விஜய்!

விஜய் 65 படத்தின் படப்பிடிப்பு பணிகள் டாக்டர் பட ரிலீஸ் காரணமாக தாமதமாகின்றன.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகனன்  நடித்துள்ள ’டாக்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த மாதம் முடிந்தது. இந்த படத்தின் ரிலீஸ் மார்ச் மாதம் 26 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரிலிஸூக்குப் பின்னரே நெல்சன் விஜய் படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார் என சொல்லப்படுகிறது.

வழக்கமாக விஜய் தனது படம் ரிலீஸானபின்னர் ஒரு மாத இடைவெளியில் அடுத்த படத்தில் நடிக்க ஆரம்பித்துவிடுவார். ஆனால் மாஸ்டர் ரிலீஸாகி 3 மாதங்களுக்குப் பிறகே அவர் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. முதலில் இந்தப் படத்தை இயக்க ஏ ஆர் முருகதாஸ்தான் ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் இடையில் அவர் வெளியே சென்றதால் டாக்டர் படத்தை இயக்கிக் கொண்டு இருந்த நெல்சன் ஒப்பந்தமானார் என்பது குறிப்பிடத்தக்கது.