செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 3 பிப்ரவரி 2021 (19:22 IST)

சிவகார்த்திகேயனின் ‘டான்’ பட நாயகி மற்றும் வில்லன் அறிவிப்பு!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ’டான்’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும், இந்த படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்ஷன் நிறுவனம் மற்றும் லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்த படத்தில் நாயகியாக டாக்டர் பட நாயகி பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல் இந்த படத்தில் வில்லனாக எஸ்ஜே சூர்யா நடிப்பார் என்று கூறப்பட்டது என்பதும் அந்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
‘டான்’ என்ற படத்தில் பிரியங்கா மோகன் மற்றும் எஸ்ஜே சூர்யா ஆகிய இருவரும் இணைகின்றனர் என லைகா நிறுவனம் தனது டுவிட்டரில் உறுதி செய்து டுவிட்டுகளை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
அனிருத் இசையமைப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது