30 ஆண்டுகளுக்குப் பின் தமிழுக்கு நடிக்க வரும் நடிகை!

Last Modified வெள்ளி, 2 அக்டோபர் 2020 (15:46 IST)

நடிகை அமலா 29 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழில் நடிக்க உள்ளார் என்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டி ராஜேந்தர் படத்தின் மூலம் சினிமா உலகுக்கு அறிமுகமான நடிகை அமலா சில படங்களிலேயே தமிழின் முன்னணி நடிகையாகானார். கமலுடன் சத்யா, ரஜினியுடன் மாப்பிள்ளை மற்றும் வேலைக்காரன் ஆகிய படங்களில் நடித்த அவருக்கு தெலுங்கு சினிமாவிலும் நல்ல வரவேற்புக் கிடைத்தது. அதையடுத்து அவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்துகொண்டு அங்கேயே செட்டில் ஆனார். அவர் கடைசியாக நடித்த தமிழ் திரைப்படம் கற்பூர முல்லை.இதையடுத்து இப்போது 29 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் தமிழில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தில் சர்வானந்த் மற்றும் ரீத்து வர்மா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். டிரீம் வாரியஸ் நிறுவனம் சார்பாக எஸ் ஆர் பிரபு தயாரிக்க உள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :