செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : செவ்வாய், 1 அக்டோபர் 2019 (12:22 IST)

"ஃபைனலுக்கு போக துணி கொண்டுவாங்கன்னு சொன்னாங்க" - சதி செய்ததா விஜய் டிவி?

பிக்பாஸ் சீசன் 3ல் ஆரம்பத்திலிருந்து சக போட்டியாளர்களிடமும் , மக்களிடமும் நல்ல பெயரை சம்பாதித்து வந்தவர் தர்ஷன். பிக்பாஸ் கொடுத்த அத்தனை டாஸ்க்களையும் ஈடுபாட்டுடன் செய்தார். இவர் டைட்டில் வின்னர் என்று மக்கள் பரவலாக பேசிவந்த நிலையில் மலையை புரட்டி போடும் அளவிற்கு இந்த வார எவிக்ஷன் நடந்தது.


 
இதை மக்கள் யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை இந்நிலையில் தர்ஷனின் ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில்  விஜய் டிவி பிக்பாஸ் குழு செப்டம்பர் 28ஆம் தேதி,  தர்ஷன் ஃபைனலுக்கு செல்ல துணி கொண்டு வாருங்கள் என்று தர்ஷன் குடும்பத்தாரிடம் கேட்டிருந்தனர். ஆனால், திடீரென்று சதி செய்து தர்ஷனை எலிமினேட் செய்தனர். காரணம் என்னவென்றே புரியவில்லை.. அப்போ யாரு வின்னரை தேர்வு செய்வார்? யார் வெளியே போகனும்?  விஜய் டிவி தான் எல்லாவற்றையும் முடிவு செய்கிறார்களா? என மிகுந்த ஆதங்கத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.  


 
இந்த தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கடைசி நிமிடத்தில் தர்ஷனுக்கு சதி செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்த மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.