திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 15 மே 2023 (14:38 IST)

மாஸ்டர் படத்தில் சாந்தணுவை வச்சி செஞ்ச லோகேஷ்… பங்கமாக கலாய்த்த விஜய்!

தமிழ் சினிமாவில் ஆரம்பமே அமர்க்களமாக அறிமுகமான நடிகர் சாந்தணு பாக்யராஜ். அவர் நடித்த சக்கரக்கட்டி திரைப்படம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸானது. ஆனால் அவருக்கு போதுமான கவனத்தைப் பெற்றுத்தரவில்லை. அதன் பிறகு அவர் பல படங்களில் நடித்தாலும், இன்னும் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றி அமையவில்லை. விஜய்யுடன் இணைந்து அவர் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் கூட அவரின் கதாபாத்திரம் ட்ரோல்களுக்கு ஆளானது. படத்தில் அவர் இடம்பெற்ற காட்சிகளை விட அதிக நேரம் இசை வெளியீட்டு விழா மேடையில் பேசியது அதிகளவில் கலாய்க்கப்பட்டது.

இந்நிலையில் இப்போது அதைப் பற்றி பேசியுள்ள சாந்தணு “சில தினங்களுக்கு முன்னர் லியோ ஷூட்டிங்கில் விஜய் அண்ணாவை சந்திக்க சென்றேன். அப்போது லோகேஷ், விஜய் அண்ணாவிடம் “பாருங்கண்ணா இவன வீட்டுக்கு வர சொன்னேன். ஆனா வராமல் ஓவரா பண்ணிட்டு இருக்கான்” என கூறினார். அதற்கு விஜய் அண்ணா “ஆமா அவன நீ மாஸ்டர் படத்துல அவனக் கூப்ட்டு வச்ச பண்ண வேலைக்கு ஒன் வீட்டுக்கு வேற வரணுமா” எனக் கேட்டார். இப்படி எங்களுக்குள்ளாகவே அது ஜாலியான விஷயமாக மாறிவிட்டது” எனக் கூறியுள்ளார்.