திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 6 ஏப்ரல் 2023 (08:45 IST)

அருண் விஜய்யின் மிரட்டலான ''மிசன் சாப்டர் -1'' பட டீசர் ரிலீஸ்

acham enbadhu illaiye #MISSION
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் அருண் விஜய். இவர்,90 களில் நடிகராக அறிமுகமாயினும், இவருக்கு, தடையற தாக்க  பிரேக் கொடுத்தது.

அதன்பின்னர்,  தடம் உள்ளிட்ட  படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தது.

தற்போது  இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் அருண்விஜய் ஒரு புதுப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் இங்கிலாந்தில் பெரும்பகுதி நடந்தது. அதன் பின்னர் சென்னையில் செட் போட்டு படமாக்கப்பட்டு, ஷூட்டிங் முடிந்துள்ளது.

லைகா தயாரித்துள்ள படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். அருண் விஜய், ஏமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் நடிக்கும் இந்த படத்துக்கு  ‘மிஷன் 1- அச்சம் என்பது இல்லையே’ என மாற்றப்பட்டுள்ளது. மேலும் படத்தின் டீசர்  டீசர் வெளியாகியுள்ளது.

திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் அருண்விஜய் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து, ஆக்சன் காட்சிகளில் மிரட்டியுள்ளார். ரசிகர்களை கவர்ந்துள்ள இப்பட டீசர் வைரலாகி வருகிறது.