1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வெள்ளி, 11 மே 2018 (15:14 IST)

முருகதாஸ் படம் முடிந்தபிறகே அடுத்த படம் குறித்த டிஸ்கஷன்: விஜய்

ஏ.ஆர்.முருகதாஸ் படம் முடிந்தபிறகே அடுத்த படம் குறித்து டிஸ்கஷன் செய்ய விஜய் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய். இது அவருக்கு 62வது படம் என்பதால், இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தை ‘தளபதி 62’ என்றே அழைத்து வருகின்றனர். கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், பிரேம்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
 
இந்தப் படத்துக்குப் பிறகு விஜய்யின் 63வது படத்தை யார் இயக்குவது என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக இருந்து வருகிறது. மோகன் ராஜா, வெற்றிமாறன், அமீர் எனப் பல பெயர்கள் அடிபடுகின்றன.
 
இதுகுறித்து விஜய் தரப்பிடம் கேட்டபோது, “இப்போது அவர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் மட்டுமே முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகுதான் அடுத்த படம் பற்றி டிஸ்கஷனுக்குப் பிறகு முடிவு செய்வார்” என்கிறார்கள்.