வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 12 ஜூன் 2023 (07:50 IST)

அமெரிக்க தொலைக்காட்சி சேனலில் விஜய் பட பாடல்!

அமெரிக்காவில் ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சி சீரியர் “நெவர் ஹேவ் ஐ எவர்-Never have I ever”. நகைச்சுவை மற்றும் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்த சீரியலின் நான்காவது சீசன் இப்போது  ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீசனில் ஒரு இடத்தில் விஜய், சமந்தா நடிப்பில் உருவான தெறி படத்தில் இடம்பெற்ற ‘உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே” என்ற பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைப் பற்றிய தகவல் இப்போது சமூகவலைதளங்களில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெறி படத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் உருவான இந்த பாடல் தமிழ் சினிமா ரசிகர்களின் ஆதர்சமான பாடல்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.