வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 10 ஜூன் 2023 (21:07 IST)

பிரபுதேவாவின் 2வது மனைவிக்குப் பெண் குழந்தை…

பிரபல நடன  அமைப்பாளரும் இயக்குனருமான பிரபுதேவாவின் இரண்டாவது மனைவிக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்திய சினிமாவின் முன்னணி நடன இயக்குனர் பிரபுதேவா. இவர், சூரியன்,  எந்திரன், போக்கிரி உள்ளிட்ட பல படங்களில்  முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடனம் அமைத்ததுடன், காதலன், டைம், வானத்தைப் போல, மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு, விஐபி,  தேவி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். தற்போதும் நடித்து வருகிறார்.

தெலுங்கில் சம்திங் சம்திங் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரபுதேவா, போக்கிரி, வில்லு, இந்தியின் வாட்டட், எங்கேயும் எப்போதும் என அடுத்தடுத்து படம் இயக்கினார்.

தன் முதல் மனைவியை விவாகரத்து செய்த பிரபுதேவா, நயன்தாரவுடன் காதல் முறிவுக்குப் பின்னர், ஹிமானி சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளுக்கு பின் ஹிமானி சிங் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இத்தம்பதிக்கு சினிமா பிரபலங்களும்,  ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.