1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (08:34 IST)

ஒரேநாளில் தொடங்கும் அஜித் & விஜய் படங்கள்!

பிகில் படத்துக்குப் பிறகு விஜய், ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை  வெங்கட் பிரபு இயக்க  உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. படத்தைப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகாமல் ரகசியமாக வைத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் பூஜை சென்னையில் பிரம்மாண்டமாக அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நாளில் அஸர்பைஜான் என்ற நாட்டில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கும் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்காக அஜித் உள்ளிட்ட படப்பிடிப்புக் குழுவினர் அனைவருக்கும் விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு அவர்கள் தயார் நிலையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.