திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj

விஜய், சூர்யாவின் சிறு வயது புகைப்படம் வைரல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ள நடிகர் விஜய் மற்றும் சூர்யா இருவரின் சிறுவயது புகைப்படம் வைரலாகி வருகிறது.

நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனவர் விஜய். பின்னர்,. செந்தூரப் பாண்டி என்ற படத்தில் விஜயகாந்திற்கு தம்பியாக விஜய் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.

அதேபோல் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் சூர்யா ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தை வசந்த் இயக்கினார். பின்னர் நேருக்கு நேர் படத்தில் விஜய், சூர்யா இருவரும் இணைந்து நடித்தாலும், விஜய் படங்களில் தொடர்ச்சியாக சூர்யா நடித்துவந்தார். இன்று இருவரும் முன்னணி நடிகர்களாக உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் அப்பாவும் நடிகருமாக சிவக்குமார் விஜய் மற்றும் சூர்யா இருவரும் சிறுவயதில் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும், விஜய் மற்றும் சூர்யா நெருக்கமான நண்பர்கள் என்பது குறிப்பிடத்தகக்து.