உலகையே குடும்பமாக கருதும் சிந்தனை இந்தியாவுக்கு இருந்தது… ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

Last Updated: வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (08:50 IST)

ஆர் எஸ் எஸ் ல் இணைய எந்த நடைமுறைகளும் தேவையில்லை எனக் கூறி அனைவரையும் அழைத்துள்ளார் அதன் தலைவர் மோகன் பகவத்.

கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் ‘வேறுபாடுகள் பல இருந்தாலும், நம் நாடு அனைத்துத் துறையிலும் முதன்மையாக விளங்கியது. எல்லா நாடுகளும் மற்ற நாடுகளைக் கைப்பற்றுவதிலேயே குறியாக இருந்த போது உலகையே குடும்பமாக கருதிய உயர்ந்த சிந்தனை இந்திய தேசத்துக்கு இருந்தது. உங்கள் அனைவரையும் நம் தேசப்பணியில் இணைய அழைப்பு விடுக்கிறேன். ஆர் எஸ் எஸ் ல் சேர எந்த நடைமுறை சிக்கல்களும் இல்லை.’ எனப் பேசியுள்ளார்.
இதில் மேலும் படிக்கவும் :