திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 11 ஜனவரி 2019 (19:49 IST)

'இளையராஜா 75' நிகழ்ச்சிக்காக விஜய்சேதுபதி செய்த விஷயம்

இசைஞானி இளைராஜாவுக்கு அவர்களுக்கு 75 வயது நிறைவடைவதை அடுத்து அவருடைய இசையின் பெருமைக்கு மரியாதை செலுத்தும் வகையில் 'திரைக்கொண்டாட்டம் இளையராஜா 75' என்ற இசை நிகழ்ச்சியை தமிழ் திரையுலகம் இணைந்து நடத்தவுள்ளது. இதில் கிடைக்கும் வருமானத்தில் நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவ தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் திட்டமிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியை நடத்தவிடாமல செய்வதற்கே சமீபத்தில் ஒருசில தயாரிப்பாளர்கள், சங்கத்திற்கு பூட்டு போட்டதாகவும் கூறப்படுகிறது.

'திரைக்கொண்டாட்டம் இளையராஜா 75' என்ற பெயரில் இந்த இசை நிகழ்ச்சி சென்னை நந்தனம் மைதானத்தில் வரும் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெற்வுள்ளது. முதல் நாள் இளையராஜாவின் பாடல்களை பல்வேறு இசைக்கலைஞர்கள் பாடவுள்ளனர். இரண்டாம் நாள் இளையராஜா தான் இசையமைத்து பாடிய பல பாடல்களை பாடவுள்ளார்

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோ ஒன்றை விஜய்சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இளையராஜாவின் திரைக்கொண்டாட்டம் என்ற இந்த நிகழ்ச்சியின் புராமோ வீடியோவை வெளியிடுவதில் தனக்கு பெருமை என்றும் விஜய்சேதுபதி கூறியுள்ளார்.