— Pinarayi Vijayan (@vijayanpinarayi) November 28, 2018
கஜா புயலில் பாதிக்கப்பெட்ட தமிழக சஹோதரர்களுக்கு கேரள மக்களின் ஆதராவை தெருவிக்கறோம். புதன் கிழமை சேர்ந்த அமைச்சரவை அவசர உதவியாக 10 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வழங்க முடிவு கொண்டோம். உணவ், துணி, ஆடைகள் உடப்பெட்ட 14 லாரி அவசர பொருட்கள் ஏற்கனவே அனுப்பி வய்த்தோம்.
இந்நிலையில், தமிழக மக்களுக்கு உதவும்படி கேரள அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார், நடிகரும் மக்கள் நீதி மன்றத்தின் தலைவருமான கமல் ஹாசன். கோரிக்கை வைத்த 24 மணி நேரத்திற்குள்ளாக தமிழக முதல்வரின் நிவாரணத் தொகைக்கு ரூ.10 கோடியை அளித்திருக்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.கஜா புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு கேரள அரசு சார்பாக ரூபாய் 10 கோடியை அளித்தற்கு @CMOKerala அவர்களுக்கு நன்றி. வேண்டுகோள் வைத்த 24 மணி நேரத்திற்குள் துரிதமாக நடவடிக்கை எடுத்த உங்கள் செயல்பாடு மனிதத்தின் வெளிப்பாடு!
— Kamal Haasan (@ikamalhaasan) November 28, 2018இதனைப் பாராட்டியும், இதற்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுருக்கிறார் கமல்.புயல் தாக்கிய அடுத்த நாளே நிவாரணப் பொருட்களை அனுப்பியதோடு இன்று தமிழர்களின் துயரை துடைக்கும் விதத்தில் தற்போது 10 கோடி ரூபாய் நிதியையும் அறிவித்த கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் அவர்களின் சகோதரத்துவ மனிதம் கண்டு மகிழ்ச்சியோடும் நன்றிகளோடும் வணங்குகிறேன்...
— VijaySethupathi (@VijaySethuOffl) November 29, 2018தவிர, நடிகர் விஜய்சேதுபதியும் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.