செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 14 ஜூன் 2023 (07:53 IST)

விடுதலை 2 ரிலீஸில் நடக்கும் மாற்றம்… மீண்டும் இழுத்தடிக்கும் வெற்றிமாறன்!

மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. ரசிகர்கள் மட்டும் இல்லாமல் திரையுலகைச் சேர்ந்தவர்களும் கூட பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்துள்ளது.

விடுதலை இரண்டாம் பாகத்துக்கு தேவையான பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாகவும், 20 நாட்கள் மட்டுமே ஷூட் செய்ய வேண்டி உள்ளதாக பட ரிலீஸின் போது சொல்லப்பட்டது. இதையடுத்து சமீபத்தில்  விடுதலை 2 ஆம் பாகத்துக்கான ஷூட்டிங் சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை என்ற இடத்தில் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இப்போது கதையில் பல மாற்றங்களை இயக்குனர் வெற்றிமாறன் செய்துள்ளதாகவும், அதனால் 40 நாட்கள் வரை ஷூட்டிங் செல்ல வேண்டி உள்ளதாலும், படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படும் என சொல்லப்படுகிறது. அதனால் வாடிவாசல் தொடங்குவதும் தாமதம் ஆகும் என சொல்லப்படுகிறது.