1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 18 செப்டம்பர் 2024 (15:43 IST)

ஆசிரியர்ன்னா தப்ப திருத்துவறவன்.. விமல் நடித்த ‘சார்’ படத்தின் டிரைலர்..!

விமல் நடித்த "சார்" என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே தொடங்கிய நிலையில், தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்சமயம் தொழில்நுட்ப பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டு, சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

"சார்" படத்தில், விமல் ஒரு கிராம பள்ளியின் ஆசிரியராக நடிக்கிறார். அங்கு அதே பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் ஒருவரை காதலிக்கிறார். இந்நேரத்தில், அந்த கிராமத்தில் உள்ள ஒரு முக்கிய நபர் "குழந்தைகள் பள்ளியில் படிக்க வேண்டாம்" என்று கூறி, பள்ளியை மூடச் செய்கிறார்.

இதற்கு எதிராக போராடும் விமல், பல்வேறு சிக்கல்கள் இடையூறுகளும் எதிர்கொள்வார். அவர் அவற்றை எப்படி சமாளித்து, பள்ளியை மீண்டும் திறக்கிறார் என்பதே படத்தின் முக்கிய கருவாக இருக்கிறது என ட்ரெய்லர் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த படத்தை "கன்னி மாடம்" திரைப்படத்தை இயக்கியதன் மூலம் புகழ்பெற்ற நடிகர் மற்றும் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கியுள்ளார். விமலுடன் சாயாதேவி, சிராஜ், சரவணன், ரமா, ஜெயபாலன் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  லும், இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva