1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 28 அக்டோபர் 2020 (16:56 IST)

கொலை மிரட்டல் வருகிறது எனப் புலம்பும் இயக்குனர்… சம்மந்தப்பட்ட நடிகரின் ரியாக்‌ஷன்!

இயக்குனர் சீனுராமசாமி தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகக் கூறியதை அடுத்து பரபரப்பான சூழல் உருவாகி உள்ளது.

தமிழில் தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் சீனு ராமசாமி. கிராமம் சார்ந்த கதைகளங்களை திறம்பட இயக்குபவர் என பெயர் பெற்ற இவர் விஜய் சேதுபதி நடிப்பில் இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் இவர் தற்போது ட்விட்டரில் தனது உயிருக்கு ஆபத்து என்றும், முதல்வர் உடனடியாக உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இந்நிலையில் தான் விஜய் சேதுபதிக்கு எதிராக செயல்பட்டு வருவதாக சிலர் போலியான செய்திகளை பரப்பியுள்ளதாகவும் அதனால் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் முதல்வரிடம் தெரிவிக்கும் முன்னரே அவர் இது பற்றி தனது நண்பரான விஜய் சேதுபதியிடம் தெரிவித்தாராம். அவரோ இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என கூலாக சொன்னாராம்.

ஆனாலும் தொடர்ந்து வந்ததால்தான் சீனு ராமசாமி டிவிட்டரில் முதல்வருக்கு புகார் அளித்ததாக சொல்லப்படுகிறது.