செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 28 அக்டோபர் 2020 (15:22 IST)

எனக்கு நீ புள்ளையா வேணும்... பாலாவிடம் கதறிய அர்ச்சனா!

பிக்பாஸ் வீடு கடந்த இரண்டு நாட்களாக, சண்டை வாக்குவாதம் என்று நிகழ்ச்சி சூடு பிடித்து விறு விறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் நேற்று பாலா ஹவுஸ்மேட்ஸ்களிடம் "நான் கேப்டன் ஆனால் எல்லாரையும் அம்மி அரைக்க வைப்பேன்" என்று கூறிவிட்டார்.

ஏற்கனவே அர்ச்சனா - பாலாவுக்கு இடையில் பெரிய போர் போய்க்கொண்டிருக்கும் வேளையில் பாலாவை சமயம் பார்த்து தட்ட நினைத்த அர்ச்சனா இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பாலாவை திட்டி பகைத்துக்கொள்கிறார். அதற்கு சப்போர்ட்டாக ரியோ , நிஷா , வேல்முருகன் என்ற அந்த மீடியா குரூப்பிஷன் நான்கு பேரும் ஒன்று சேர்ந்துக்கொண்டனர்.

இதையடுத்து இன்று வெளியாகிய முதல் ப்ரோமோவில் பாலாவுடன் வாக்குவாதம் செய்து சண்டை போட பாலா கார்டன் ஏரியாவில் மனம் வருந்தி அழுத்துவிட்டார். இந்நிலையில் தற்ப்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் இவர்களின் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர். ஆம், பாலாவுக்காக கதறி அழும் அர்ச்சனா அவரிடம், உனக்கு ஆரம்பத்தில் இருந்தே என்னை பிடிக்கவில்லை.

எனக்கு பையன் இல்ல உன்ன என்னோட பையனா நெனச்சு பேசினேன். ஆனால்,  நீ உனக்கு நான் குழந்தை இல்லனு சொல்லிட்ட.. எனக்கு நீ புள்ளையா வேணும் டா... நீ  வேண்டாம் வேண்டாம்னு சொன்னா நான் எங்கடா போவேன் என கூறி கதறி அழ பின்னர் பாலா கட்டிப்பிடித்து அவரை சமாதானம் செய்துவிட்டார்.  அப்போ ரியோ கதி அவ்ளோவ் தானா இனி..?