ரஜினிகாந்திற்கு வில்லனாகும் விஜய்சேதுபதி
ரஜினியை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் தற்போது அரசியல் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். ஒருபுறம், அடுத்த படத்திற்காக சில இயக்குனர்களிடம் கதை கேட்டிருந்தார். அதில், தெறி, மெர்சல் படங்களை இயக்கிய அட்லீ, அருவி படத்தை இயக்கிய அருண் பிரபு, ஜிகர்தண்டா, இறைவி ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் ஆகிய மூவரும் அடக்கம்.
இறுதியில் ரஜினியின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் என செய்தி வெளியானது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. ஜிகர்தண்டா திரைப்படத்தை பார்த்த ரஜினி, இந்த திரைப்படத்தின் வில்லன் ரோலுக்கு என்னை அணுகியிருந்தால், நான் நடித்துக்கொடுத்திருப்பேன் என்றார்.
இந்நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிகர் விஜய்சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்சேதுபதியும் நெகட்டிவ் ரோலில் கனக்கச்சிதமாக நடிப்பார். இதனால் இருவரது ரசிகர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.