வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (18:21 IST)

ரஜினி , விஜய் , கமலை தொடர்ந்து டாப் ஹீரோவுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி தனது வித்தியாசமான நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள நிலையில் இமேஜ் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து வில்லன் வேடங்களிலும் நடித்து பெரும் புகழ் பெற்று வருகிறார், 
 
ஒரு மாஸ் ஹீரோவாக இருந்தாலும் கதாபாத்திரங்கள் பிடித்திருந்தால் வில்லனாக நடிக்கவும் தயக்கம் காட்டாத விஜய் சேதுபதி மாதவனின் விக்ரம் வேதா படத்தில் ஆரம்பித்து விஜய் , ரஜினி , கமல் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களுக்கு வில்லனாக நடித்து வருகிறார். 
 
தெலுங்கு சினிமாவில் வில்லனாக நடித்த உப்பன்னா திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றதால் அங்கு விஜய் சேதுபதியின் மார்க்கெட் உச்சத்தை தொட்டுவிட்டது. இந்நிலையில் அடுத்ததாக தெலுங்கு நடிகர் தற்போது நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் விஜய் சேதுபதி வில்லங்க நடிக்கிறார். இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க தமன் இசையமைக்கிறார்.