திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 5 மே 2023 (08:03 IST)

விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தொடர்ந்து தோல்வி படங்களாக நடித்து வந்த விஜய் சேதுபதிக்கு விடுதலை வெற்றிப் படமாக அமைந்தது. இதையடுத்து அவருக்கு மீண்டும் ஏறுமுகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர் நடிப்பில் சில ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடந்த ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படம் மே 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் வெங்கட கிருஷ்ணா ரோகநாத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் யாதும் ஊரே யாவரும் கேளீர். இப்படத்தில் மேகா ஆகாஷ் ரகுஆதித்யா, நடிகர் விவேக் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி இலங்கையில் இருந்து வந்து வாய்ப்புகளை தேடும் இசைக்கலைஞராக நடித்துள்ளார்.

இந்த படம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்தாலும் பல காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.