1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 4 மே 2023 (20:05 IST)

பாபா கோவிலில் பிரார்த்தனை செய்துவிட்டு... தோழிகளுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய திரிஷா !

தமிழ் சினிமாவில் முதன்முறையாக 21 ஆண்டுகள் கடந்த பின்னும் உச்ச அந்தஸ்த்தில் வலம் வரும் ஒரே நடிகை த்ரிஷா மட்டும் தான். பல படங்களில் ஹீரோவுடன் டூயட் பாடிய த்ரிஷா தற்போது நயன்தாரா ஸ்டைலில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். 
 
எவர்க்ரீன் நடிகையாக வலம் வரும் திரிஷா இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதற்காக காலை எழுந்து பாபா கோவிலில் பிரார்த்தனை செய்துவிட்டு தோழிகளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார். திரிஷா தற்போது விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.