வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 16 ஜனவரி 2021 (16:11 IST)

விஜய் சேதுபதி நடிக்கும் காந்தி டாக்ஸ்… ஒரே நேரத்தில் 6 மொழியில் ரிலீஸ்!

விஜய் சேதுபதி நடிக்க உள்ள புதிய படமான காந்தி டாக்ஸின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தனது கைவசம் இப்போது 10 படங்கள் வரைக் கைவசம் வைத்துள்ளார். அதில் 3 இந்தி படங்களும் அடக்கம். இந்நிலையில் இப்போது அவர் 6 மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் காந்தி டாக்ஸ் எனும் படத்தில் நடிக்க உள்ளார். இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.