திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 1 செப்டம்பர் 2021 (17:09 IST)

பிசாசு-2 பட புதிய அப்டேட்...ரசிகர்கள் மகிழ்ச்சி

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் திரைப்படங்களில் தனக்கென தணி பாணியை கொண்டவர் இயக்குனர் மிஷ்கின். இவரது இயக்கத்தில் சில ஆண்டுகள் முன்னதாக வெளியான பிசாசு திரைப்படம் வசூல் அளவிலும், விமர்சன அளவிலும் பரவலான வரவேற்பை பெற்றது.

 இந்நிலையில் தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் இதன் இரண்டாம் பாகமாக “பிசாசு 1”வை மிஷ்கின் இயக்கி வருகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தின் முதற்கட்ட போஸ்டர் சமீபத்தில்  வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. பின்னர், இயக்குநர் மிஸ்கின் தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார். ஆண்டிரியா நடித்துள்ள இப்படத்தின் போஸ்டர் மிரட்டலாக  வித்தியாசமாக அமைந்த இப்போஸ்டர் பலராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் பிசாசு -2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இனிமேல் இப்படத்தின் போஸ்ட் புரொடெக்சன் வேலைகள் நடைபெறவுள்ளதால் விரைவில் இப்படம் திரையில் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.