வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 18 ஜனவரி 2021 (19:01 IST)

மீண்டும் சர்ச்சைக்குள்ளான விஜய் சேதுபதி பட போஸ்டர்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து முடித்துள்ள ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்க உள்ளன. அந்த வகையில் தற்போது அட்டகாசமான போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

விஜய் சேதுபதி இசைக்கலைஞனாக நடிக்கும் இந்த படத்தின் போஸ்டர் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதற்குக் காரணம் போஸ்டரில் இடம்பெற்றுள்ள இலங்கையின் தேசியக்கொடிதான் காரணமாம். ஆனால் படம் வெளியான பின்னர் இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் மாறிவிடும் எனக் கூறிவருகின்றனர் படத்தைப் பற்றி அறிந்தவர்கள்.