விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி ட்ரெய்லர்! – இன்று வெளியாகிறது!
விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி விவசாயி படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் இயக்கியுள்ள படம் கடைசி விவசாயி. இந்த படத்தை இயக்குனர் மணிகண்டனே எழுதி இயக்கியுள்ளதுடன், தயாரித்தும் உள்ளார். விவசாயிகளின் பிரச்சினையை மையப்படுத்திய இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் மற்றும் ரிச்சர்ட் ஹார்வி ஆகியோர் இசையமைத்துள்ளனர்.
இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாவதாக நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.