ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 6 ஏப்ரல் 2023 (09:15 IST)

லியோ படத்தில் விஜய் சேதுபதி இருக்காரு ஆனா இல்ல… லேட்டஸ்ட் தகவல்!

விஜய் நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீரில் 60 நாட்களுக்கும் மேல் சென்று முக்கியமானக் காட்சிகளை படமாக்கி சென்னை திரும்பியுள்ளனர். இதையடுத்து சென்னையில் அடுத்த கட்ட ஷுட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படமும் லோகேஷ் இயக்கிய விக்ரம் படம் போல  லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸில் இடம்பெறுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதியின் வாய்ஸ் ஓவர் இடம்பெறும் என சொல்லப்படுகிறது. ஆனால் அவர் நடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே லோகேஷின் மாஸ்டர் படத்திலும், விக்ரம் படத்திலும் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.