செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (15:33 IST)

விஜய் சேதுபதியை மொய்க்கும் தெலுங்கு திரையுலகம்… அநியாயத்துக்கு ஏறும் சம்பளம்!

நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் மொழி தாண்டியும் மற்ற மொழி படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன. ஹீரோவாக மட்டும் இல்லாமல் வில்லன், சிறப்புத்தோற்றம் ஆகிய வேடங்களிலும் நடித்துக் கலக்கி வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல், விக்ரம் மற்றும் மாமனிதன் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின.

இந்நிலையில் தமிழ் தாண்டியும், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கில் விஜய் சேதுபதிக்கு செம்ம டிமாண்ட் நிலவுவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பல முன்னணி நடிகர்கள் தங்கள் படங்களில் விஜய் சேதுபதியை வில்லனாக்கி விட துடிக்கிறார்களாம். இதனால் வரும் வாய்ப்புகளுக்கு எல்லாம் சம்பளத்தை அதிகமாக்கி கல்லா கட்டி வருகிறாராம் விஜய் சேதுபதி.