செம்மயான டிரைலர் வருது! "சூப்பர் டீலக்ஸ் 2 லுக்" போஸ்டருடன் விஜய் சேதுபதி அறிவிப்பு!

Last Updated: வியாழன், 21 பிப்ரவரி 2019 (18:32 IST)
‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் செகெண்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய்சேதுபதி ட்ரிபிள் ட்ரீட்டாக படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பையும்  வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.


 
ஆரண்ய காண்டம் பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா - விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற  திருநங்கையாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து மலையாள படத்தின் முன்னணி ஹீரோ பகத் பாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ள  இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
 
'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் தற்போது  ரிலீசுக்கு தயாராக உள்ளது.  'ஒய்நாட் ' நிறுவனம் படத்தின் விநியோகத்தைக் கைப்பற்றியுள்ளது.   கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர்  வெளியாகி வைரலானது.
 
இந்த நிலையில் தற்போது  படத்தின் டிரைலர் நாளை வெளியாக இருப்பதாகவும், படம் வருகிற மார்ச் 29-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

சூப்பர் டீலக்ஸ் படம் வருகிற மார்ச் 29-ல் ரிலீசாகிறது. அதே நேரத்தில் கூடிய விரைவில் செமயான டிரைலர் வெளியாகவுள்ளது என கூறி படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார். 
 


இதில் மேலும் படிக்கவும் :