திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 28 ஜூலை 2021 (10:16 IST)

சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி பெயரில் இப்படியும் ஒரு மோசடியா?

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களாக இருக்கும் பலரும் புதுமுகங்கள் நடிக்கும் படங்களுக்கு ஒரு ப்ரமோஷனாக படத்தின் போஸ்டர்களை சமூகவலைதளங்களில் ரிலீஸ் செய்து தருகின்றனர்.

புதுமுகங்கள் நடிக்கும் படங்களை ரசிகர்களிடம் கொண்டு செல்வதற்காக படக்குழு முன்னணி நடிகர்களை அனுகி தங்கள் படத்தின் போஸ்டர், முதல் பாடல் போன்றவற்றை ரிலீஸ் செய்து தர சொல்லி அனுகுவார்கள். அதனால் தங்கள் படத்தின் மேல் ரசிகர்களும் கவனமும் விழும்.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி மற்றும் ஜி வி பிரகாஷ் போன்றவர்கள் அதிக அளவில் இதுபோல ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இதுபோல அவர்கள் செய்வதற்கு அவர்களுக்கு நெருக்கமானவர்கள் சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடம் பணம் கறக்கிறார்களாம். இது சம்மந்தப்பட்ட நடிகர்களுக்கு தெரியாமலும் பார்த்துக் கொள்கிறார்களாம்.