ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 4 மார்ச் 2024 (14:06 IST)

மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் ஐஸ்வர்யா ராஜேஷ்… படத்துவக்க நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி!

ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பல படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பவர்களில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர், நடித்து சமீபத்தில் ரிலீஸ் ஆன  சில திரைப்படங்கள் சரியாகப் போகவில்லை.

இதனால் ஒரு சிறு இடைவெளி எடுத்துக்கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் இப்போது மீண்டும் ‘வளையம்’ என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக தேவ் என்பவர் அறிமுகம் ஆகிறார். ராட்சசன் உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது.

மற்ற முக்கிய வேடங்களில் சேத்தன், தமிழ், பிரதீப் ருத்ரா, ஹரிஷ் பெரேடி, சுரேஷ் மேனன் ஆகியோர் நடிக்க மகேந்திர எம். ஹென்றி இயக்குகிறார். இந்தப் படத்துக்கு மைக்கேல் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்த நிலையில் விஜய் சேதுபதி நட்புக்காக அந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.