விஜய் சேதுபதியின் புதிய படம் தமிழ் ராக்கர்ஸில் வெளியானது…படக்குழுவினர் அதிர்ச்சி
தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் க/பெ ரணசிங்கம். இப்படத்தை விருமாண்டி என்பவர் இயக்கியுள்ளார்.
இப்படம் இந்தி, தெலுங்கு கன்னடம், தமிழ், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் இன்று வெளியானது.
விஜய் சேதுபதியின் படம் இதற்கு முன் இவ்வாறு ரிலீசானதில்லை என்பதால் அவரது ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இப்படத்தில் கவிப்பேரரசு வைரமுத்து ஜிப்ரான் இசையில் எழுதிய பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில், இன்று காலை இன்று #ZEE5 இணையவெளியில் வெளியான இப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் இளையதளத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.