செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (17:59 IST)

விஜய் பட நாயகியின் ’’கமனம்’’ பட அடுத்த லுக் வெளியீடு !

நடிகர் விஜய்யின் மெர்சல், ஓ கே கண்மணி போன்ற படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் நித்யா மேனன்.   இவர் தற்போது கமனம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் அடுத்த லுக்கை இப்படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கமனம் படத்தை சுஜானா ராவ் என்பவர் இயக்கியுள்ளார்.

நடிகை ஸ்ரேயா சரண் இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளா ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.

தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கி, மலையாளம் கன்னடம் ஆகியவற்றிலும் இந்தியிலும் வெளியாவதால் நிச்சயம் வசூல் சாதனை படைக்கும் என தெரிகிறது.  இப்பட நாயகி நித்யாமேனனின் லுக்கை நடிகர் சர்வான்ந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.