கிளைமாக்ஸ் சீன் பிடிக்கலன்னு விஜய் விலகிய படத்தை சூப்பர் ஹிட் கொடுத்த சூர்யா!

Papiksha| Last Updated: சனி, 12 அக்டோபர் 2019 (15:30 IST)
தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக ஜொலித்துக்கொண்டிருக்கும் நடிகர் விஜய் பல்வேறு வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அதே சமயம் தன் வெற்றிக்கு சிக்கல் வந்துவிட கூடாது என்பதற்காக நல்ல படங்களை தேர்வு செய்து நடிப்பதில் விஜய் கில்லாடி. அதே சமயம் இது தனக்கு சரிப்பட்டு வராது என கூறி பல படங்களை அவர் நிராகரித்ததுமுண்டு. 

 
அந்த வகையில் கடந்த 2002ம் ஆண்டு வெளிவந்த "உன்னை நினைத்து" படத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்துள்ளார். ஆனால், ஒரு சில மாதங்கள் கழித்து இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி சரியில்லை என்று கூறி அந்த படத்தில் இருந்து விலகி விட்டாராம். பின்னர் பாதியில் நின்ற படத்தை சூர்யாவை நடிக்க வைத்து வெற்றி படைத்தனர். இந்த தகவலை அந்த படத்தின் ஹீரோயின் லைலா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். 


 
பின்னர் சில வருடங்கள் கழித்து அந்த படத்திற்காக விஜய்யை வைத்து எடுக்கப்பட்ட ஒரு சில காட்சிகள் வெளியாகி பரவலாக பேசப்பட்டது. இதுகுறித்து இயக்குனர் விக்ரமனும் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இதை அறிந்த விஜய் ரசிகர் நல்ல படத்தை இப்படி நழுவவிட்டுட்டாரே தளபதி என புலம்பி வருகின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :