புதன், 1 பிப்ரவரி 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified செவ்வாய், 6 டிசம்பர் 2022 (09:58 IST)

வாரிசு vs துணிவு மோதல் குறித்து விஜய் என்ன சொன்னார்?... பிரபல நடிகர் பகிர்ந்த சீக்ரெட்!

வாரிசு திரைப்படம் வெளியாகும் அதே நாளில் அஜித்தின் துணிவு திரைப்படமும் ரிலீஸ் ஆகிறது.

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதே நாளில் அஜித்தின் துணிவு படமும் ரிலீஸ் ஆவதால் இரு நடிகர்களின் ரசிகர்களும் சமூகவலைதளங்களில் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வாரிசு படத்தில் நடித்துள்ள நடிகர் ஷாம் இதுபற்றி விஜய் தன்னிடம் என்ன சொன்னார் எனப் பகிர்ந்துள்ளார். அதில் “நான் இந்த தகவலை சொன்னது, விஜய் அண்ணன் ‘வரட்டும்பா… அவரும் நம்ம நண்பர்தான… இரண்டு படமும் நல்ல ஓடட்டும்’ எனக் கூறினார்” என சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.