புதன், 1 பிப்ரவரி 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated: செவ்வாய், 6 டிசம்பர் 2022 (09:25 IST)

பிரபல இயக்குனர்கள் வாய்ஸ் ஓவரில் வெளியானது விஜய் ஆண்டனியின் ரத்தம் டீசர்!

விஜய் ஆண்டனி நடிக்கும் அடுத்த திரைப்படமான ரத்தம் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ்படம் 1 மற்றும் 2 ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர் இயக்குனர் சி எஸ் அமுதன். இப்போது அவர் தன்னுடைய ரூட்டை மாற்றி  ரத்தம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் மூன்று நாயகிகள் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

முந்தைய படங்களைப் போல இல்லாமல், சீரியஸான ஒரு பிரச்சனையை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியுள்ளார் சி எஸ் அமுதன். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

இந்த டீசரில் பிரபல இயக்குனர்களான வெங்கட்பிரபு, வெற்றிமாறன் மற்றும் பா ரஞ்சித் ஆகியோர் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.