செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By C.M.
Last Updated : சனி, 23 டிசம்பர் 2017 (14:59 IST)

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தைப் பாராட்டிய விஜய்

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தைப் பார்த்த விஜய், அதன் இயக்குநரை அழைத்துப் பாராட்டியுள்ளார்.



கார்த்தி நடிப்பில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ரிலீஸான படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயினாக நடித்த இந்தப் படத்தை, ‘சதுரங்க வேட்டை’ வினோத் இயக்கியிருந்தார். போஸ் வெங்கட் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். ஜிப்ரான் இசையமைத்த இந்தப் படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.

எல்லாரிடமும் பாராட்டைப் பெற்ற இந்தப் படம், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்தப் படத்தைப் பார்த்த விஜய், இயக்குநர் வினோத்தை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். ஒரு நடிகரின் படத்தை இன்னொரு முன்னணி நடிகர் பாராட்டுவது என்பது அதிசயமாக பார்க்கப்படும் இந்தக் காலகட்டத்தில், இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.